வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து யாழ் கைதடி சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதி நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட யாழ் மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்!
வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து நேற்றைய தினம் கைதடி சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதி நலன்புரி நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட யாழ் குடாநாட்டை சேர்ந்த மக்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.குடாநாட்டை சேர்ந்த 568பேர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு கைதடி சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 75 பல்கலைக் கழக மாணவர்களும் அடங்குவார். இம் மக்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் ஒரிரு கிழமைகளில் வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள ஏனைய யாழ் குடாநாட்டை சேர்ந்த மக்களையும் மிக விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக உடனடி வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அவர்கள் தொடர்பான விபரங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.குடாநாட்டை சேர்ந்த 35 ஆயிரம் பேரின் விவரங்கள் வவுனியா அரச அதிபரால் யாழ்.செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு கிராம சேவையாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 3ஆயிரத்து 546குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 47பேருக்கு பொலிஸ் அனுமதி கிடைக்கப்பெற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதலில் கிடைத்த கேட்கப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் 568பேர் வவுனியாவில் இருந்து நேற்றைய தினம் அழைத்துவரப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலம் உறவினர்களிடம் சேர்க்கப்படுவார்கள்.

0 Response to " "
แสดงความคิดเห็น