சிறைச்சாலைக்குள் பொட்ட நௌபரிடம் இரு கைத்தொலைபேசிகள்.
புதன்கிழமை கண்டி போகம்பரை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைத்தொலைப்பேசிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் அம்பேபிட்டிய கொலைக்குற்றவாளியான பொட்ட நௌபர் என்ற கைதியிடமிருந்தே இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் இந்த தொலைபேசிகள் எவ்வாறு? யாரால் கொண்டுவரப்பட்டன என்பது குறித்த விசாரணைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 Response to "சிறைச்சாலைக்குள் பொட்ட நௌபரிடம் இரு கைத்தொலைபேசிகள்."
แสดงความคิดเห็น