மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே அலுவலகம் - கிழக்கு மாகாண முதலமைச்சர்
இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் உப அலுவலகமொன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் திறக்கப்படுவதற்கு ஒரு சாராரால் தெரிவிக்கப்பட்டு வரும் எதிர்ப்புகள் காரணமாக, சில தமிழ் பிரதேசங்களில் இயல்பு நிலை அவ்வப்போது பாதிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அம் மாவட்ட மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே அலுவலகம் திறக்கப்படவிருப்பதாகக் கூறுகின்றார்.
அம்பாறை மாவட்ட மக்கள் திருகோணமலைக்கு வருவதென்றால் சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனைத் தவிர்ப்பதற்காகவே இந்த அலுவலகம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்.








0 Response to "மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே அலுவலகம் - கிழக்கு மாகாண முதலமைச்சர்"
แสดงความคิดเห็น