jkr

கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்


கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது: நான் கேரமாமேனை அடிக்கவில்லை. விமானநிலையத்துக்கு நான் வந்து காரிலிருந்து இறங்கியபோது எனது தலையில் வேகமாக ஏதோ பட்டது. அது கேமரா என்று அறியாமலேயே அதை நான் தள்ளிவிட்டேன். நான் அவரை அடிக்கவில்லை என்றார் அவர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates