பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஜேசுதாஸின் நெருங்கிய உறவினர் ஆனந்த் ஜோனுக்கு 59 வருட சிறைத்தண்டனை!
அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான, இந்தியாவின் சென்னையை சேர்ந்த ஆனந்த் ஜான் அலெக்சாண்டருக்கு (35), அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், 59 வருட சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2002 முதல், 2007 ஆம் ஆண்டு வரை, ஏராளமான இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது, 14 வழக்குகள் தாக்கல் செய்யபப்ட்டு, இவருக்கு எதிராக இளம்பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக,நீதிமன்றம் தெரிவித்துள்ளதுஅமெரிக்காவின் பிரபல மாடல்களான பாரிஸ் ஹில்டன், மேரி பிளிஜ் போன்றவர்களுக்கும் ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்துள்ள ஆனந்த், மாடல் அழகிகளை பிரபல்யப்படுத்துவதாகவும், வாய்ப்பு தருவதாகவும் கூறியே பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டாப்பட்டார்.இதனை அடுத்தே வழக்கை விசாரித்த நீதிமன்றம் இச்சிறைத்தண்டனையை அவருக்கு வழங்கியது.தீர்ப்பை கேட்டதும், கதறி அழுத ஆனந்த் ஜான், தன் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் படி, நீதிபதியிடம் மன்றாடினார். எனினும் கோரிக்கையை ஏற்க மறுத்தார் நீதிபதி.“எனினும் இது குறித்து, ஆனந்த்தின் குடும்பத்தினரும், நெருங்கிய வட்டாரத்தினரும், கடும் அதிருப்தி அடைந்திருப்பதுடன், ‘அமெரிக்காவில், ஆடை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியின் காரணமாகவும், ஆனந்த்திற்கு அமெரிக்க திரையுலக பிரபலங்களிடம் காணப்படும் செல்வாக்கு காரணமாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவே இச்சோடிக்கப்பட்ட வழக்கு நடாத்தப்பட்டு, அவரை வீழ்த்தும் முகமாக இத்தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.”இவர், பிரபல பின்னணி இசைப்பாடகர் ஜேசுதாஸின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஜேசுதாஸின் நெருங்கிய உறவினர் ஆனந்த் ஜோனுக்கு 59 வருட சிறைத்தண்டனை!"
แสดงความคิดเห็น