புலிகளே புலிகளை காட்டிகொடுக்கும் துரோகிகள்!
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை புலிகளே காட்டிகொடுக்கும் துரோகம் இடம்பெற்றுவருவதாக இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.படையினரால் கைது செய்யப்பட்டும் சரணடைந்துள்ள புலிகளே இவ்வாறான காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும், முகாம்களில் மக்களுடன் மக்களாக பதுங்கியுள்ள புலிகளையே படையினர் வசம் சிக்கியுள்ள புலிகளின் முக்கியஸ்தர்களான தயாமாஸ்ரர், பொட்டு அம்மான், தமிழினி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் காட்டி கொடுப்பதாகவும், தமது சகாக்களையே காட்டி கொடுக்கும் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஜீப் வண்டிகளில் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகின்றார்கள்.
புலிகளின் காட்டி கொடுப்பின்பேரிலேயே புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் ஆசிய நாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கூட புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரி போட்டி காரணமாக உருத்திரகுமார் என்பவரால் காட்டி கொடுக்கப்பட்டார் என்றும், இவர் மட்டுமல்ல 1980களில் இந்தியா செல்வதற்காக வடமராட்சி மணற்காட்டு பகுதியில் படகுக்காக காத்திருந்த குட்டிமணி போன்றவர்கள் கூட பிரபாகரனால் காட்டி கொடுக்கப்பட்டவர்தான் என்பதை மறந்துவிட முடியாது.
காட்டி கொடுப்புக்கும் கழுத்தறுப்புக்கும் பழக்கப்பட்ட புலிகள் காட்டி கொடுத்தார்கள்; என்ற பெயரில் எத்தனை அப்பாவி பொதுமக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், சமய பெரியார்கள், மதகுருமார், சக இயக்க உறுப்பினர்களை துரோகிகள் என்ற பெயரில் வீதி வீதியாக சுட்டுக்கொன்ற புலிகள், இன்று இடைத்தங்கல் முகாம்களுக்குள் பதுங்கியிருக்கும் தமது சகாக்களை காட்டி கொடுக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையாகவே தமிழினத்தை காட்டிகொடுத்தவர்கள் புலிகளே ஆவர், தமது சகாக்களையும் உண்மையான உணர்வுடனும் இன உணர்வுடன் போராடிய தமிழர்கள் பலரை துரோகிகள் என்று காட்டி கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்ட புலிகள், ஏனையவர்களை பார்த்து துரோகிகள் என்று முத்திரை குத்துவதானது வேடிக்கைக்குரியது. புலிகள் தமக்கு தாமே சூட்ட வேண்டிய நாமம்தான் துரோகியாகும். தமிழினத்தையோ விடுதலை போராட்டத்தையோ வேறு எவரும் காட்டி கொடுக்கவும் இல்லை கழுத்தறுப்பு செய்யவும் இல்லை என்பதை புலிகளுக்காக குரல் இன்றுவரை குரல்கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

0 Response to "புலிகளே புலிகளை காட்டிகொடுக்கும் துரோகிகள்!"
แสดงความคิดเห็น