தென் மாகாணத் தேர்தலை சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : ஜனாதிபதி
தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமது எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்துக்கு எதிராகவன்றி, நாட்டுக்கு எதிராகச் செயற்படும் தலைவராக இருக்கின்றார். இப்படியொரு எதிர்க்கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாரஅவர் மேலும் தெரிவித்ததாவது தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.இந்நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கித் தந்தமை தொடர்பிலேயே இம்மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று லட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட வாக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன.தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கிறது.முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித்துள்ளோம். புலிகள் ஸ்ரீ மாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருத வேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக்கத் துணிந்தார்கள்.
அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்று குவித்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவுக்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கரவாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம்.பாரிய அபிவிருத்திப் பயணமொன்றை முன்னெடுக்கும் இவ்வேளையில் மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அதனை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எமது எதிர்கால சந்ததியினர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான பொறுப்பும் எமக்குள்ளது. இவற்றுக்கெல்லாம் சிறந்த தலைமைத்துவம் அவசியம். அதற்கு அம்பாந்தோட்டை மக்களின் பூரண ஆதரவு அவசியம்.தென் மாகாணத்தில் வன்முறை இல்லாத தேர்தல் இடம்பெறவேண்டும். வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது வெற்றிக்கு வழிவகுப்பது எமது மக்களின் பொறுப்பு.இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாரச்சி உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 Response to "தென் மாகாணத் தேர்தலை சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : ஜனாதிபதி"
แสดงความคิดเห็น