jkr

குச்சவெளியில் வேளாண்மையை ஆரம்பிக்க ஏர்பூட்டு விழா

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் திரியாய் நீலப்பணிக்கன் குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 25 வருடங்களின் பின்னர் வேளாண்மைச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ஏர்பூட்டு விழாவில் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா, வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை சகிதம் அப்பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விவசாயிகள் கடந்த 25 வருடங்களாக இப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட முடியாதிருப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். குறிப்பாக பாதுகாப்பு தரப்பினரின் அனுமதியின்மை மற்றும் நீலப்பணிக்கன் குளம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது போன்றவையே தாம் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தடையாக இருப்பதாக விவசாயிகளினால் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்திப்பொன்றின் மூலம் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நீலப்பணிக்கன் குளமும் புனரமைப்பு செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து எதிர்வரும் பெரும்போகச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் மாகாண விவசாய அமைச்சர் ஏற்பாடு செய்த ஏர்பூட்டு விழாவில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகளும் விவசாயிகளும் என பலரும் கலந்து கொண்டனர் விவசாயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரமும் விதை நெல்லும் வழங்கப்பட்டன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "குச்சவெளியில் வேளாண்மையை ஆரம்பிக்க ஏர்பூட்டு விழா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates