jkr

நட‌ப்பது ஹ‌ி‌ட்ல‌‌ர் ஆ‌ட்‌சி : நட‌க்க வே‌ண்டும் எ‌ம்.ஜி.ஆ‌ர் ஆ‌ட்‌சி!!!

jayalalitha1200011த‌‌மிழக‌த்த‌ி‌ல் ஹ‌ி‌ட்ல‌ரி‌ன் ஆ‌ட்‌சி நடைபெறு‌கிறது எ‌ன்று‌ம் எ‌ம்.ஜி.ஆ‌ரி‌ன் ஆ‌ட்‌சியை ‌மீ‌ண்டு‌ம் அம‌ர்‌த்த மக்களைச் சந்திக்கத் தயாராகுங்கள் எ‌ன்று தொ‌ண்ட‌ர்களு‌க்கு அ.இ.அ.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று தொ‌ண்ட‌ர்களு‌க்கு எழு‌‌தியு‌ள்ள மட‌லி‌ல், ”உலக வரலாற்றில் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளர்த்த பெருமைக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை குட்டிச்சுவராக்கி, தனது மகன்கள், மகள், பேரன் என தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் பதவிகளை அளித்து, அதை குடும்ப இயக்கமாக மாற்றிவிட்டார் கருணாநிதி.
பேறிஞர் அண்ணா தோற்றுவித்த இயக்கத்தை குடும்ப இயக்கமாக மாற்றி, அண்ணாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான வகையில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை, குடும்ப ஆட்சியை கருணாநிதி தமிழகத்தில் நடத்தி கொண்டிருக்கிறார்.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது. விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். தொழில்கள் தொய்வடைந்து உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் வேகமாக பெருகிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் நடைபெறுவது ஹிட்லரின் ஆட்சி.
அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், தமிழரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தமிழர்களும், தமிழகமும் எழுச்சி பெறும் வகையில், புரட்சித் தலைவரின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்க, தமிழகம் அமைதிப் பூங்காவாக தழைத்தோங்க, மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ, கருணாநிதியின் கபட நாடகங்களை மக்களிடையே எடுத்துச் சென்று, குடும்ப ஆட்சியை வேரோடு ஒழித்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று எனது தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.
நம்மை எதிர்த்துவரும் தடைகளை தகர்த்தெறிவோம். சோதனைகள் புதிதல்ல, அவற்றை சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். பேறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் அமர்த்துவோம். மக்களைச் சந்திக்கத் தயாராகுங்கள். நாளைய தமிழகம் நமது கையில்” எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நட‌ப்பது ஹ‌ி‌ட்ல‌‌ர் ஆ‌ட்‌சி : நட‌க்க வே‌ண்டும் எ‌ம்.ஜி.ஆ‌ர் ஆ‌ட்‌சி!!!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates