jkr

பாக்கியசோதிக்குக் கொலை மிரட்டல்:விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரபல மனித உரிமை செயற்பாட்டாளருமான பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பாக்கியசோதி சரவணமுத்துவுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகப் பத்திகைச் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.உண்மையிலேயே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தால், அது யாரால் விடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராயுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான வகையில் பல்வேறு மட்டங்களில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணும் சூழ்ச்சிகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கொலை மிரட்டல் குறித்து பல்வேறு மட்டத்தினரும் பத்திரிகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், இந்த எழுத்து ஆவணம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களுக்கு ஒரு சாதகமான பின்னணியை உருவாக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாக்கியசோதிக்குக் கொலை மிரட்டல்:விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates