jkr

'இலங்கையில் இடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை கொண்டுள்ளது'-மன்மோகன் சிங்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மன்மோகன் சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது, அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது, கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன என்று மன்மோகன் சிங் மேலும் கூறியிருக்கிறார். இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப்பணிகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் கூறும் இந்தியப் பிரதமர், புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள் தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தனது நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.
தமிழக மீனவர் மீது தாக்குதல்இதனிடையே க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையும் அவர்களது 5 படகுகளையும் நேற்றிரவு இல‌ங்கை கட‌ற்படை‌‌யின‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல் ‌மிர‌ட்டி ‌சிறை‌ப் ‌பிடி‌த்து செ‌ன்றுவிட்டதாக

அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறைபிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் கதிபற்றி எதுவும் தெரியவில்லை, அண்மைக்காலமாக இவ்வாறு தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, இருந்தும் மத்திய, மாநில அரசுகள் கடும் நிலையெடுக்காமல் இலங்கை இவ்வாறு தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்க அனுமதிப்பது வேதனைக்குரியது'' என்று நம்மிடம் கூறினார். அச்சத்தின் காரணமாக தற்போது பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர் எவரும் மீன்பிடிக்கச்செல்லவில்லை என்றும் மீனவர் சங்கத் தலைவர் போஸ் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "'இலங்கையில் இடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை கொண்டுள்ளது'-மன்மோகன் சிங்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates