jkr

கவிஞர் வாலி மனைவி மரணம்

பிரபல கவிஞரும் முன்னணி திரைப்பட பாடலாசிரியருமான வாலியின் மனைவி ரமணி திலகம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

தமிழ் திரையுலகில் அமரர் எம்ஜிஆர் காலத்திலிருந்து முன்னணிக் கவிஞராகத் திகழ்பவர் வாலி. அவரது மனைவி ரமணி திலகம், சிறிது நாட்களாக உடல்நலமின்றி இருந்தார்.

இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி செலுத்தினார்.

திரையுலகப் பிரமுகர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் ரமணி திலகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.

செய்தி கேள்விப்பட்டதும், தமிழக முதல்வர் கருணாநிதி வாலிக்கு போனில் ஆறுதல் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கவிஞர் வாலி மனைவி மரணம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates