மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு இடம்பெயர்ந்த மக்கள்
மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு
இலங்கை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் குற்றம் சுமத்துகின்றார் வெள்ளிகிழமை விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்திலும் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். முன்னர் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் சில மணித்தியாலங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் அவர், இது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்ட விடயம் என்று பதிலளித்ததாக கூறுகிறார் துரைரட்ணம். இம்முறை அழைத்து வரப்பட்டவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்பு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் இரா .துரைரத்தினம் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக மீள் குடியேற்ற அமைச்சரின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை. உலக பொருளாதார நெருக்கடியால் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்பு
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளது என்று தொடர்ந்து பலர் கூறி வருகின்றனர். அந்த நெருக்கடி ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில், அதன் தாக்கம் குறையவில்லை என்பதைவிட, அதன் பாதிப்புக்கள் இப்போதுதான் அதிகம் வெளிப்படத் துவங்கியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகிறார்கள். வளமான வாழ்க்கையை அமைக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற பல இந்தியர்கள் இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உலக அளவிலான பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலையிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். | ||||||||||







0 Response to "மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு இடம்பெயர்ந்த மக்கள்"
แสดงความคิดเห็น