புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேர பேருந்து சேவைகள் ஆரம்பம்
வீரகேசரி இணையம் 9/13/2009 9:23:35 PM - புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இரவு 10.00 மணிக்குப் போக்குவரத்துச் செய்வதற்கு விசேட பஸ் போக்குவரத்துச் சேவையை நடத்த இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான அதிகாரி என். கே. டபிள்யூ. குணவர்த்தன தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தவிசாளர் சட்டத்தரணி தம்மிக ஹேவபத்திரனவின் பணிப்புரையின்கீழ் இந்த இரவு 10 மணி பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புறக்கோட்டை பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்த பஸ் சேவை பின்வரும் பாதை இலக்கங்களில் செல்கின்றன. 125 இங்கிரிய, 138 மத்தியöகாட, 190 அங்கொட, 145 மட்டக்குளிய, 168 உடஹமுல்ல, 100 கல்கிசை, 120 ஹொரணை, 400 அழுத்கம, 234 தெல்கொட, 180 நிட்டம்புவ, 260 ஹெந்தல, 188 ரத்தொழுகம, 240 நீர்கொழும்பு, 224 பூகொட, 126 தெகடன, 269 திவுலப்பிட்டிய மற்றும் 122 அவிஸ்ஸாவெல்ல வரை போக்குவரத்துச் செய்யும் என அவர் தெரிவித்தார்.
இரவு வேளையில் இறுதி நேரப் போக்குவரத்திற்காக அதிகமானவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 10 மணி விசேட பஸ் சேவை எதிர்வரும் காலங்களில் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரவு 12.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தூரப் பயணத்திற்கான பஸ் சேவை தற்பொழுது வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 Response to "புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேர பேருந்து சேவைகள் ஆரம்பம்"
แสดงความคิดเห็น