jkr

கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் -அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

 கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறுகின்றார்.

வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டததைச் சேர்ந்த குடும்பங்களை சிங்கள மகா வித்தியாலயத்தில் சந்தித்து உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.நேற்றுக் காலை மட்டக்களப்பை வந்தடைந்த 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் சிங்கள மகா விதிதயாலயத்திலும் ,குருக்கள் மடம் கலைவானி வித்தியாலயத்திலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் விபரங்கள் பதிவு செய்யப்படுவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நேற்று சிங்கள மகா விததியாலயத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்  பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டை மீட்டுள்ளதால் இனிமேல் அகதி வாழ்க்கை என்பதற்கு ஒரு போதும் இடமிராது " என்றார்
இந் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் தமிழ் மக்கள் சுதந்திரமான வாழ்வை எட்டுவதற்கும் ஜனாதிபதியின் கரததை பலப்படுத்த வேண்டும் " என்றும் அவர் கேட்டுக் கொண்டார். .இந் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் " யுத்தம் ,இடம் பெயர்வு மற்றும் அகதி முகாம் வாழ்க்கை என பல் வேறு நெருக்கடிகளை கடந்த கால வாழ்க்கையில் சந்தித்துள்ளீர்கள் .அந்த கசப்பான எண்ணங்களையே எண்ணி உங்களது வாழ் நாட்களை வீனணடிக்கக் கூடாது.
பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைவதை இலக்காகக் கொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் .எமது பிரதேசத்தில் தற்போது முழுமையான ஜனநாயகச் சூழல் ஏற்படுத்தப்டப்டுள்ளது. எவருக்கும் பயப் படத் தேவையில்லை.ஏதாவது பிரச்சினைகள் ,அச்சுறுத்தல்கள் வந்தால் உடனடியாக பொலிசாரிடம் முறையிடுங்கள் " என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் -அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates