jkr

ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக எதிர்வரும் சபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணை


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 4 காரணங்களை முன் வைத்து எதிர்வரும் சபை அமர்வின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான சேகுதாவூத் பஷீர்(ஸ்ரீ.ல.மு.கா.), ஐ.தே.க. உறுப்பினர் அ.பரசுராமன் மற்றும் அ.சசிதரன் ஆகியோர் ஒப்பமிட்டு இப் பிரேரணையை எழுத்து மூலம் அவைத் தலைவரிடம் முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பாகப் பிரேரணையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது :
கிழக்கு மாகாண அமைச்சு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பலதரப்பட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த பல வருடங்களாக தொண்டர் அடிப்படையில் சுகாதார சேவை ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்தவர்களை நிரந்தர சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினாலும்,மாகாண ஆளுனரினாலும் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டமை,இந் நியமனங்கள் சம்பந்தமாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு சுகாதாரத் தொண்டர்களை ஏமாற்றியது,
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நியமன விடயங்களில் நீதியற்ற முறையில் தலையிட்டு எவ்வித்திலும் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றாத பல புதியவர்களை சுகாதார தொண்டர்களாக பணி புரிந்தவர்கள் என்ற தவறான தகவலை அமைச்சின் செயலாளருக்கு வழங்கியதோடு அவர்களையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறு எழுத்து மூல உத்தரவு வழங்கியமை, குறிப்பிட்ட அமைச்சர் எவ்வித நியமன விதிகள் நடைமுறைகள் என்பவற்றைப் பின்பற்றாது நியமனங்கள் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை,வைத்தியசாலைகளில் சேவைகளை மேம்படுத்த வேண்டிய குறித்த அமைச்சர் நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற நிரந்தர நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்று கணிப்பீடு செய்யப்பட்ட 249 பேரின் நியமனங்களை வழங்காமல் கடந்த 9 மாதங்களாக இழுத்தடித்தமை. இதனால் மாகாண வைத்தியசாலைகளில் மக்களுக்கு கிடைக்கவிருந்த 249 பேரின் அத்தியாவசிய சேவையை சொந்த அரசியல் லாபங்களுக்காக துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய விடயங்களை முன் வைத்தே மேற்படி பிரேரணையை குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
எதிர்வரும் 29ஆம் திகதி மாகாண சபையின் அடுத்த அமர்வு கூட இருப்பது குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக எதிர்வரும் சபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates