ஈரானின் அணு ஆயுதம் தொடர்பான தமது குற்றச்சாட்டு தவறானது என்பது அமெரிக்காவுக்கு தெரியும்
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாக தாம் தவறாக குற்றஞ்சாட்டுகிறோம் என அமெரிக்க அதிகாரிகள் அறிந்து உள்ளனர் என ஈரானிய உச்சநிலைத் தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னி தெரிவித்தார்.
ஈரானிலிருந்தான அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்பு முறைமையொன்றை ஸ்தாபிக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிடத் திட்டமிட்ட பின், ஈரான் முதல் தடவையாக வெளிப்படுத்தும் உத்தியோக பூர்வ பிரதிபலிப்பாக இது உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் அரசாங்கமானது முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷினுடையதை ஒத்த கொள்கைகளையே பின்பற்றுவதாக ஆயதுல்லா அலி கமெய்னி குற்றஞ்சாட்டினார்.
ஈரான் அணு ஆயுதமொன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் அதேசமயம் ஈரானிய எறிகணைகள் மற்றும் அவற்றின் ஆபத்து என்பன தொடர்பில் பேசும் அமெரிக்க அதிகாரிகள், தாம் கூறுவது பொய் என்பதை அறிவார்கள்'' என ஆயுதுல்லா அலி கமெய்னி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
புனித ரமழான் மாத முடிவையொட்டியே அவரின் இந்த உரை இடம்பெற்றது.
ஈரானின் அணுசக்தி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இம்மாத இறுதி வரை அமெரிக்கா அந்நாட்டுக்கு காலக்கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலானா, ஈரானின் அணுசக்திப் பேச்சாளர் சயீத் ஜலிலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சந்தித்து அந்நாட்டின் அணுசக்தி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

0 Response to "ஈரானின் அணு ஆயுதம் தொடர்பான தமது குற்றச்சாட்டு தவறானது என்பது அமெரிக்காவுக்கு தெரியும்"
แสดงความคิดเห็น