jkr

மக்கள் சந்தித்த அழிவுகள் ,இழப்பகள் , அவலங்கள் அதிகமாகும் - ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

கிழக்கு மாகாண யுத்த அனர்த்தங்களுடன் ஒப்பிடும் போது வன்னி யுத்தத்தின் போது மக்கள் சந்தித்த அழிவுகள் ,இழப்பகள் , அவலங்கள் அதிகமாகும் ."என மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கூறுகின்றார்.
2006 ம் ஆண்டு மூதூர் கிழக்கிலிருந்து யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் மத்தியல் உரையாற்றி யபோதே இவ்வாறு அவர் கூறினார்.
இக் குடும்பங்களை கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி வைக்கம் நடவடிக்கைகள் நடை பெற்று வரும் நிலையில் " உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்போம் " என்ற தலைப்பில் மூதார் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று மாலை கொக்குவில் இடைத் தங்கல் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஆயர் உட்பட பல வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டனர்
சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண யுத்த அனர்தத்தையும் வன்னி யுத்த அனர்த்தததையும் ஒப்பிட்டு உரையாற்றிய ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை
 2006 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்கு சகலரும் உதவக் கூடிய வகையில் சாதகமான சூழ்நிலை தென்பட்மையினால் முடிந்த வரை பல்வேறு தரப்பினராலும் உதவ முடிந்தது..ஆனால் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது அப்படி யான சூழ்நிலை இருக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையின் போது இடம் பெயர்ந்த மக்கள் முகாம்களிலிருந்தாலும் சதந்திரமாக நடமாடக் கூடிய வாயப்பகளைப் பெற்றிருந்தார்கள் .ஆனால் வன்னியில் இடம் பெயர்ந்தவர்களைப் பொறுத்த வரை முகாம்களிலிருந்து எப்போ வெளியே செல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் முடங்கிக் கிடக்கின்றார்கள்" என்று குறிப்பிட்டார்
 தற்போது சொந்தப் பிரதேசத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் உங்களைப் பொறுத்த வரை ஏற்கனவே வாழ்ந்த கிராமங்களில் மீள் குடியேறக் கூடிய வாயப்பு கிடைக்குமா ? என்ற ஏக்கத்துடன் அங்கு திரும்புகின்றீர்கள் .சொந்த மண்ணில் மீளக் கடியேறும் வாயப்பு கிடைக்குமானால் சகலருக்கும் அது சந்தோஷமானது.அப்படியான வாயப்பு கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ." என்றார்
இந் நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் சார்பில் இணைப்பாளர் பொண் .செல்வராஜா சு( மு.பா.உ) எகெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் .அருட்தந்தை சில்வெஸ்டர் சிறீ தரன் ,மாவட்ட புனர்வாழ்வு உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷரீப் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மக்கள் சந்தித்த அழிவுகள் ,இழப்பகள் , அவலங்கள் அதிகமாகும் - ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates