jkr

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு! பராக் ஒபாமாவின் அரசாங்கத்திற்கு வேண்டுகை

வன்னி யுத்தத்தில் அரங்கேறிய போர்க்குற்றங்கள் குறித்தும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை தொடங்குமாறு பராக் ஒமாவின் அரசாங்கத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

வன்னி யுத்தத்தில் சிறீலங்கா அரசுப் படைகள் அரங்கேற்றிய மனிதப் படுகொலைகள் தொடர்பான காணொளி ஆவணங்கள் பன்னாட்டு ஊடக மட்டங்களில் வெளிவரத் தொடங்கியுள்ள பின்புலத்தில், இவ்வாறான அழைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் போர்க்குற்றவியல் பிரிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனற் குழு விடுத்திருப்பதாக பிரித்தானியாவின் சனல் - 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.அத்துடன், பொதுமக்களின் படுகொலைகள் தொடர்பான நிழற்பட ஆதாரங்களை அமெரிக்க அரசு ஆராய்ந்து வருவதாகவும், இது சிறீலங்காவிற்கான அமெரிக்காவின் படைவழி உதவிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், சனல் - 4 தொலைக்காட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு! பராக் ஒபாமாவின் அரசாங்கத்திற்கு வேண்டுகை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates