இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை:தாயகம் திரும்புவதை கைவிட்டனர் அகதிகள்
இலங்கையில் தமிழர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவித்து, தமிழக முகாம்களில் தங்கியுள்ள அகதிகள், இலங்கை செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.இலங்கையில் 1980ல் ஏற்பட்ட இனக் கலவரத்தையடுத்து, தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள், 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழக முகாம்களில் தங்கியிருந்த பலர், இலங்கைக்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது, தமிழகத்தில் அனைத்து வசதிகளுடன் வாழ்வதையே விரும்புவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அகதிகள் முகாம்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Response to "இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை:தாயகம் திரும்புவதை கைவிட்டனர் அகதிகள்"
แสดงความคิดเห็น