jkr

தமிழீழப் பகுதி எண்ணெ‌ய் வளம் : ரிலையன்ஸை அழைக்கிறது சிறிலங்கா

தமிழீழப் பகுதியான மன்னாரிலும், தென் இலங்கையிலும் உள்ள கச்சா எண்ணெ‌ய் வளங்களை கண்டறிந்து கச்சா எண்ணெ‌ய் எடுக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை அழைக்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சிறிலங்க அமைச்சர் நவின் திசநாயக்கே தெரிவித்துள்ளார்.புது டெல்லி வந்துள்ள சிறிலங்க அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் நவின் திசநாயக்கே, இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் எடுப்பது தொடர்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இந்தியாவிற்கு வழங்குவதற்கென்றே சில இடங்களைத் தேர்வு செய்துள்ளோம்” என்று திசநாயக்கே கூறியுள்ளார்.
இலங்கை எண்ணெ‌ய் வளங்களில் ரிலையன்ஸ் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறிய திசநாயக்கே, மான்னாரிலும், தென் இலங்கையிலும் எண்ணெ‌ய்க் கிணறுகள் அமைக்கும் அனுமதி அந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
எண்ணெ‌ய் கண்டெடுப்பிற்கு கேய்ர்ன்ஸ் இண்டியா நிறுவனம் 400 மில்லியன் டாலர் கொடுத்து எடுத்துள்ளது என்றும், ரிலையன்ஸ் எடுக்கும் பகுதிகளுக்கும் கிட்டதட்ட இதே தொகைக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழீழப் பகுதி எண்ணெ‌ய் வளம் : ரிலையன்ஸை அழைக்கிறது சிறிலங்கா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates