jkr

இடம்பெயர் முகாமிலிருந்து தப்பிய விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் ஒருவர் இடம்பெயர் மக்கள் தங்கியுள்ள மெனிக்பாம் முகாமிலிருந்து தப்பியோடியுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்த ரீதியாக தோல்வியடையும் வரையில் தீவிர புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய தலைவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கு பொறுப்பான புலனாய்வுத்துறை தலைவராக செயற்பட்ட லெப்டினன் கேணல் நாகேஸ் சுடர்தீபன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இடம்பெயர் முகாமிலிருந்து மக்களை வெளியேற்றும் தரகர் கும்பலின் ஒத்துழைப்புடன் இவர் தப்பிச் சென்றிருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இவ்வாறு தரகர்களின் உதவியுடன் பணத்தைக் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இடம்பெயர் முகாமிலிருந்து தப்பிய விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates