போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கையர் இருவர் கைது

இளையான்குடி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தில் இருந்து 2 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். திவாகரன்(22), பால்ராஜ் (27) என்ற அந்த 2 பேரின் முகவரிகளை சரிபார்க்க போலீசுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த 2 பேர் குறித்து விசாரிப்பதற்காக இளையான்குடி போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில், இருவரும் அந்த முகவரியில் வசிப்பவர்கள் அல்ல என்பதும், அவர்கள் இலங்கை அகதிகள் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் மேட்டூரிலும் வசித்து வருவது தெரிய வந்தது. போலி முகவரி கொடுத்து இருவரும் பாஸ்போர்ட் பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, திவாகரன், பால்ராஜ் ஆகியோரை இளையான்குடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்

0 Response to "போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கையர் இருவர் கைது"
แสดงความคิดเห็น