jkr

இஸ்ரேலிடமிருந்து 6 கப்பல்கள் அடுத்த வருடம் கொள்வனவு


போர்ச் சூழல் நிறைவடைந்த நிலையில், வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை கொமாண்டர் வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க இன்று காலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஊடுறுவதைத் தடுப்பதற்கேற்ற வகையில், பலத்த காவல் நடவடிக்கையில் இவை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை இலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையைச் சேர்ந்த இருவரைப் பணயம் வைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்த இந்த மீனவர்களை கரையோர காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டவேளை, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிய இலங்கை மீனவர்கள் அவர்களைப் பணயம் வைத்ததாக கடற்தொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 7 படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதில் உள்ளவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட இரண்டு கரையோர காவல்துறையினரை குறித்த படகுகள் சுற்றிவளைத்ததுடன் அவர்கள் இருவரையும் பணயம் வைத்ததாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் பின்னர் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இஸ்ரேலிடமிருந்து 6 கப்பல்கள் அடுத்த வருடம் கொள்வனவு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates