ஏ9 வீதியில் பயணிக்கும் பிரயாணிகள் பஸ்கள் முறிகண்டி கோவிலில் தரித்துச் செல்லுகின்றன. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடவடிக்கையின் பலன்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து தற்சமயம் ஏ9 நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் அனைத்து பிரயாணிகள் போக்குவரத்து வாகனங்களும் முறிகண்டி கோவிலில் தரித்து நின்றே பயணத்தை தொடருகின்றன.ஏ-9 நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருமுறிகண்டி தேவஸ்தானமானது தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அதன் நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஏற்கனவே எடுத்துக்கூறப்பட்டிருந்தது.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் வரும் வழியில் திருமுறிகண்டி தேவஸ்தானத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் செய்தபோது மேற்கண்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஆலயத்தின் பிரதம குரு ஜெயந்த சர்மா குருக்கள் எடுத்துக்கூறுகையில் திருமுறிகண்டி கோவிலானது தெரு வழிபாட்டு தேவஸ்தானமாக விளங்கும் நிலையில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் முறிகண்டி பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள்; பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த பூக்கட்டுதல் அர்ச்சனைப் பொருட்களின் விற்பனை உட்பட ஏனைய நடவடிக்கைகள் மற்றும் காலம்காலமாக பிரசித்தி பெற்ற முறிகண்டி கோவில் கச்சான் விற்பனை என்பவனவற்றை ஆரம்பிப்பதன் ஊடாக அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேற்படி வேண்டுகோள்கள் குறித்து கூடிய கவனமெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாக அவ்விடத்தில் இருந்தவாறே முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் திருமதி சுபாஷினியுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியதுடன் அங்கு சமூகமளித்திருந்த பிரதேச பாதுகாப்பு படை அதிகாரிகளின் கவனத்திற்கும் மேற்படி விடயங்களை கொண்டுசென்றதை அடுத்தே தற்சமயம் பிரயாணிகளின் வாகனங்கள் அனைத்தும் முறிகண்டியில் தரித்துச் செல்லுகின்றன.
தற்சமயம் ஏ-9 நெடுஞ்சாலை ஊடாகச் செல்லும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் சொகுசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் திருமுறிகண்டியில் தமது வழிபாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அந்த பஸ்கள் அனைத்தும் அங்கு நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)







0 Response to "ஏ9 வீதியில் பயணிக்கும் பிரயாணிகள் பஸ்கள் முறிகண்டி கோவிலில் தரித்துச் செல்லுகின்றன. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடவடிக்கையின் பலன்."
แสดงความคิดเห็น