jkr

மே மாதம் பதினெட்டாம் திகதிய சம்பவம் இடம்பெற்றிருக்கா விட்டால் இங்கிருக்கும் அநேகர் இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டார்கள். - தோழர் டக்ளஸ் தேவானந்தா

மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மனித உரிமைகள் தின நிகழ்வு இன்றையதினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோதே ஈபிடிபி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் ஐக்கியம் குறித்து எல்லாரும் பேசுகின்றார்கள். நான் ஐக்கியத்தை எதிர்க்கவில்லை. ஆனால் ஐக்கியம் என்பது நடைமுறைச்சாத்தியமானதாக இருக்க வேண்டும். எம்முன்னால் இரண்டு பிரச்சினைகள் காணப்பட்டன. அதில் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. மற்றையது தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையாகும். மக்கள் அனைவரும் ஓரணி திரண்டால் இருபது வருட பிரச்சினையை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரமுடியும். மூக்கிருக்கும் வரையும் சளியும் இருக்கும். அதேபோல யுத்தம் நடைபெற்ற வரைக்கும் மனித உரிமை மீறலும் காணப்பட்டன. அந்நிலைமை மே மாதம் பதினெட்டாம் திகதியுடன் குறைந்துவிட்டது. இந்த நிலைமையினை பாதுகாக்க வேண்டும். பலப்படுத்த வேண்டும். இது அரசியல்வாதிகளின் கைகளில் மட்டுமல்ல பொதுமக்களும் பங்கெடுத்து பாதுகாக்க வேண்டும்.

நான் தினமும் நூற்றுக்கணக்கான மக்களைச் சந்திக்கின்றேன். பொது அமைப்புக்களின் அழைப்பின் பேரில் பல கூட்டங்களில் பங்குபற்றுகின்றேன். வேறு இடம் கிடைக்காமல் இங்கே வந்துதான் எனது கருத்தைச் சொல்லவேண்டும் என்ற அவசியம் எனக்குக் கடையாது.

எம்முடன் ஒன்றாக வசித்தது வந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் வந்து குடியேற இப்போது எவ்வித தடையும் இல்லை. முஸ்லிம் மக்கள் எந்நேரமும் வரலாம். அவர்களை வரவேற்க யாழ்ப்பாண மக்கள் தயாராக காத்திருக்கின்றனர்.

மே மாதம் பதினெட்டாம் திகதி சம்பவம் இடம்பெற்றிருக்காவிட்டால் இன்றைய கூட்டம் கூட நடந்திருக்காது. ஏன் இன்று இங்கே கலந்துகொண்ட அநேகர் வந்திருக்கக்கூட மாட்டார்கள். இவ்வாறு தமதுரையில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மே மாதம் பதினெட்டாம் திகதிய சம்பவம் இடம்பெற்றிருக்கா விட்டால் இங்கிருக்கும் அநேகர் இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டார்கள். - தோழர் டக்ளஸ் தேவானந்தா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates