யாழ். வேலையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு.
யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் நீண்ட சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.கடந்தவாரம் யாழ். வேலையற்ற பட்டதாரிகளின் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பானது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது எங்கள் தேசம் எங்கள் அரசு. உங்களது வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் நியாயமானவை. ஆயினும் அவற்றை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவை. ஆயினும் உங்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க நான் முழு நடவடிக்கை எடுப்பேன். இதன்மூலம் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரே இரவில் சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. நான் எதைச் சொல்லுகின்றேனோ அதைச் செய்வேன்.
தற்போது புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இதற்கு மக்களும் பெரும் தியாகம் செய்துள்ளார்கள். இதன்மூலம் உங்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் பேசவும் தற்போது சுதந்திரம் கிடைத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அமைதி சந்தோசமானதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளாக சுதந்திரமாக சிந்தித்தலும் வாக்களித்தலும் உள்ளன.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிவரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டியது பட்டதாரிகளாகிய உங்களது கடமை. எனவே யுத்தத்திற்கு முடிவு கண்டவரை உங்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவது மட்டுமல்லாமல் கௌரவமான அரசியல் தீர்வு தர உள்ளவரை நாம் பலப்படுத்த வேண்டும் இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
இதேவேளை யாழ். வேலையற்ற பட்டதாரிகளிடையே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உங்களிடையே ஒற்றுமை பேணப்பட்டு ஒரே குரலில் நீங்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அனைவரினதும் ஏகமனதான தீர்மானத்துடன் யாழ். வேலையற்ற பட்டதாரிகளுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)







0 Response to "யாழ். வேலையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு."
แสดงความคิดเห็น