ஓய்வுபெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள் மீண்டும் சேவைக்கு!
உயர்தரப் பிரிவில் ஆங்கில மொழிமூலம் கற்பிக்க, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஈடுபடுத்தக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
முதல் கட்டமாக 300 ஆசிரியர்கள் இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
வணிகக் கல்வி, பொருளாதாரம், புவியியல், கணக்கியல், அரசியல் விஞ்ஞானம், ஆகிய பாடங்களுடன் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பிக்கவே இந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிபந்தனைகளுக்கு அமைய அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
தற்போது 601 பாடசாலைகளில் உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் ஆங்கில மொழிமூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்த எண்ணிக்கையை உயர்த்துவதே அமைச்சின் எதிர்பார்ப்பெனவும் செயலாளர் கூறினார்.
0 Response to "ஓய்வுபெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள் மீண்டும் சேவைக்கு!"
แสดงความคิดเห็น