jkr

சென்னையில் அமிதாப்... இளையராஜாவுடன் 'பா' பார்த்தார்!


'இசைத் துறையில் நிஜமான மேதை இளையராஜா' எனப் பாராட்டினார் அமிதாப் பச்சன்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சனிக்கிழமை சென்னை வந்தார். இளையராஜாவுடன் பா படத்தின் சிறப்புக் காட்சியில் பங்ககேற்றார்.

இளையராஜா இசையில், பால்கி இயக்கத்தில், அமிதாப்பின்மிக வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள பா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் பாராட்டுக்களும் அந்தப் படத்துக்கு குவிகின்றன.

படத்தின் பாடல்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

படம் வெளியான தினத்தன்று மும்பையில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமிதாப், அதில் பங்கேற்க வருமாறு இளையராஜாவை அழைத்துள்ளார். ஆனால் ராஜாவால் போக முடியவில்லை.

எனவே இளையராஜாவுக்காக சென்னையில் ஒரு தனி ஷோவுக்கு ஏற்பாடு செய்ததிருந்தது அமிதாப்பின் ஏபி கார்ப்பரேஷன்.

சனிக்கிழமை மாலை நடந்த இந்த சிறப்புக் காட்சியில் திரையுலகினர் பெருமளவில் பங்கேற்று, இசையுலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் இளையராஜாவுக்கும், பாலிவுட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

படம் துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் இளையராஜாவும், அமிதாப்பும் மைக்கில் பேசினர்.

அப்போது, சென்னை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் அமிதாப்.

"இந்தியாவிலேயே அதிக ஒழுக்கம் மிகுந்த நகரம் சென்னைதான். இந்தப் படம் தமிழ்க் கலைஞர்களால் உருவான மிகச் சிறந்த படைப்பு. பால்கியும் பிசி ஸ்ரீராமும் அற்புதமான கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை.

அவரது இசையில் என் படம உருவானது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே சீனி கும் படத்தின் பாடல்கள் பெரும் சாதனை நிகழ்த்தின. இப்போது பா அதை முறியடித்துள்ளது" என்றார்.

மகா கலைஞன் அமிதாப்-ராஜா:

பின்னர் பேசிய இசைஞானி, "அமிதாப் போல ஒரு மகா கலைஞனை பார்ப்பது மிக அரிது. திறமை, அடக்கம் இரண்டும் ஒருசேர அமைந்த நடிகர். இந்தப் படத்தில் எங்கள் பங்களிப்பை விட அமிதாப்பின் பங்களிப்பு உயர்ந்தது, மதிப்பு மிக்கது. பால்கியின் திரைக்கதை படத்தின் மேஜிக்" என்றார்.

தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் அனைவருமே திரண்டு வந்து ராஜாவுக்கும் அமிதாப்புக்கும் பொன்னாடை, மலர்க்கொத்து கொடுத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சென்னையில் அமிதாப்... இளையராஜாவுடன் 'பா' பார்த்தார்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates