பொன்சேகாவின் ஆதரவு பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு சோமவன்ச, சந்திரிகாவிற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்கும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு சோமவன்ச அமரசிங்க, சந்திரிக்காவிடம் கோரியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஜெனரல் சரத் பொன்சோவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு தாம் ஆதரவளிக்க உள்ளதாகவும் தேர்தல் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யும் திட்டமில்லை எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.







0 Response to "பொன்சேகாவின் ஆதரவு பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு சோமவன்ச, சந்திரிகாவிற்கு அழைப்பு"
แสดงความคิดเห็น