ரஜினிகாந்துக்கு அமிதாப்பச்சன், நடிகைகள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர், நடிகைகள் இன்று வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ரஜினி தெய்வீக வாழ்க்கை வாழ்கிறார். 60 வயது வந்தாலே ஒரு ஒளி பிறக்கும். இந்த  வருடம் அவருக்கு விசேஷமானது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு அவர்  உதாரணமாக இருக்கிறார். எனது சிறந்த நண்பர் எளிமையானவர் பண்பாளர். சூப்பர் ஸ்டார்  அந்தஸ்தில் இருந்தால் கூட அதையும் தாண்டி எளிமையாக இருக்கிறார். இதுபோன்ற மனிதரை  பார்ப்பது அபூர்வம் என்று அமிதாப் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரஜினி அற்புதமான மனிதர்.  நான் பார்த்தவர்களில் தலை சிறந்த மனிதர் அவர்தான். மூன்று படங்களில் அவருடன்  சேர்ந்து நடித்தது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய இளம் ஹீரோக்கள் உள்ளனர்.  அப்படி எத்தனைபேர் இருந்தாலும் ரஜினிதான் இளமையானவர். ரஜினி இருக்கிற தமிழ்  சினிமாவில் நானும் இருப்பதில் பெருமை படுகிறேன். இன்று பிறந்த நாள் கொண்டாடும்  அவருக்கு ஆண்டவன் எல்லா ஆசிகளையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரேயா  கூறுகையில், ரஜினியை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இளைய தலைமுறை  நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். குறிக்கோளுடன் உழைத்தால் எதையும் அடையலாம்  என்று அவர் நிரூபித்து காட்டி இருக்கிறார். ரஜினியை நம்மில் ஒருவராகவே பார்க்கலாம்.  இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும். இன்று அவரது பிறந்தநாளில்  நிறைய பேர் வாழ்த்துவார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால்  சந்தோஷப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினி மனைவி லதா கூறுகையில், நான் அவரை  குழந்தை மாதிரிதான் பார்க்கிறேன். அவருக்கு குழந்தை மனம். அடிக்கடி தன்னை அவர் சுய  பரிசோதனை செய்து கொள்கிறார். வீட்டுக்கு வரும்போது அப்பாவாகவும் குடும்ப  தலைவராகவும் தான் வருவார். நடிகராக வரமாட்டார் என்று கூறினார்.







 
0 Response to "ரஜினிகாந்துக்கு அமிதாப்பச்சன், நடிகைகள் வாழ்த்து"
แสดงความคิดเห็น