jkr

தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு அமைச்சு துரித நடவடிக்கை


அமைச்சர் மிலிந்தமொரகொட சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 650 தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்ப டுத்துவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் பேசியுள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள் ளது. தடுப்புக் காவலில் உள்ளவர்க ளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் விடயம் நீதி அமை ச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இணைக் கூட்டங்களின் போது பேசப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சட்ட மாஅதிபர் ஏற்கனவே விசேட பிரி வொன்றை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள தமிழ் இளைஞர்களில் 59 பேரை சட்ட மாஅதிபர் கடந்த இரு மாதங்களில் விடுதலை செய்துள்ளார். இம்மாதத்தில் மேலும் குறிப்பிட த்தக்க எண்ணிக்கையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் இளைஞர் களை விடுதலை செய்ய நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் சர்வதேச நபர்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடித்து அவர்களது கோவைகளை பூரணப்படுத்தி அனுப்புமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கு மாறு பொலிஸ் மாஅதிபரை சட்டமா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத் தப்படும் என்று அமைச்சர் மொரகொட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு அமைச்சு துரித நடவடிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates