விளம்பரத்தில் நடிக்க தீபிகாவுக்கு ரூ.1.5 கோடி
மும்பை : விளம்பர படங்களில் நடிக்க ஒரு ஒப்பந்தத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கும் நட்சத்திரங்கள் வரிசையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சேர்ந்துள்ளார். ஒரு விளம்பரத்துக்கு அவர் ரூ.1.5 கோடி பெறுகிறார்.
இந்தி திரையுலக நட்சத்திரங்கள், சினிமாவில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதுடன் விளம்பர ஒப்பந்தங்களிலும் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகின்றனர். ஒரு விளம்பரத்தில் நடிக்க நடிகைகளில் கரீனா கபூர், கேத்ரினா கைப் ஆகியோர் ரூ.2 கோடி ஊதியம் பெறுகின்றனர்.
பிரியங்கா சோப்ரா ரூ.1.5 கோடி முதல் 2 கோடி வரை பெறுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர்கள் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் விளம்பர ஊதியம் ரூ.3 கோடிக்கு மேல். இந்நிலையில், விளம்பரங்களில் நடிக்க நடிகை தீபிகா படுகோன் கடந்த ஆண்டு வரை ரூ.60 லட்சம் பெற்று வந்தார். இந்த ஆண்டில் அது 2 மடங்குக்கு மேல் உயர்ந்து விட்டது. புதிய ஒப்பந்தங்களில் ஒரு விளம்பரத்துக்கு ரூ.1.5 கோடி தருமாறு தீபிகா கேட்கிறார்
0 Response to "விளம்பரத்தில் நடிக்க தீபிகாவுக்கு ரூ.1.5 கோடி"
แสดงความคิดเห็น