பொங்கலுக்கு வர்றோம்ல..’
பைனான்ஸ் நெருக்கடி, கோர்ட், கேஸ், கேஸ் போட்டவர் வீட்டின் மீது தாக்குதல்… என வில்லங்கமாக போய்க் கொண்டிருந்த தமாஷ் படமான “கோவா” மேட்டர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா, கடன் கொடுத்தவருக்கு வங்கி உத்தரவாதம் கொடுத்துவிட்டதால் வழக்கு முடிவுக்கு வர, படத்தை வெளியிடும் வேலையில் பரபரப்பாக உள்ளது வெங்கட் பிரபு அண்ட் டீம். இப்போது நாளிதழ்களில் பொங்கலுக்கு வர்றோம்ல என்ற கித்தாப்பாக அறிவித்தபடி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள் கோவா குழுவினர். ஜெய், சினேகா, பூஜா, பிரேம்ஜி என நடிகர்கள் கூட்டமே நடித்துள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் இசையில் பாடல்கள் லேட்டாக பிக்கப்பாகி வருகின்றன. சினேகா இந்தப் படத்தில் பிகினியில் தோன்றவிருக்கும் மேட்டர், கொஞ்சநாளாக நெட் உலகை தீப்பிடிக்க வைத்துக் கொண்டுள்ளது. படம் வெளியாவதற்குள் அந்த பிகினி ஸ்டில்களை வெளியிட்டு, ‘நெருப்பு’ அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் யோசனையில் உள்ளாராம் வெங்கட் பிரபு.
0 Response to "பொங்கலுக்கு வர்றோம்ல..’"
แสดงความคิดเห็น