jkr

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை.

கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த ஊடக மற்றம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரியதர்சனயாப்பா பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல செயலாளர் மற்றும் வெளியீட்டுப் பணிப்பாளர் நாயகம் புஸ்பகுமார யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மாகாண அமைச்சு திணைக்களம் வலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் ஆயுபோவன் வணக்கம் அஸ்ஸல்லாமு அலைக்கும்இன்று முதல்முறையாக தேசிய மட்ட விழாவான பாடநூல் பகிர்ந்தளிக்கும் வைபவம் வடமாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் நிகழ்வதையிட்டு நான் மிகுந்த மகிழ்வடைகின்றேன்.

மான்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சியினால் கடந்த யுத்த காலங்களில் நிலவி வந்த துன்ப சூழல்கள் நீங்கி தற்போது ஓர் அமைதி வாழ்விற்கான முன் ஏற்பாடுகள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.

மேலும் இதற்கு நேரடியான தலைமைத்துவத்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கி இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறி அவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்படுத்தப்படுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கல்வி சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதியின் வழிகாட்டலில் கல்வி அமைச்சரினால் துரிதமாக மேம்பட்டு வருவது காணக்கூடியதாக இருக்கிறது.

யாவருக்கும் கல்வி மற்றும் சமவாய்ப்பு அடிப்படையில் இலவசமான கல்வி மற்றும் வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இலவச பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு இடம்பெறுகிறது.

வட மாகாணத்தைப் பொறுத்தவரை மக்கள் தங்கள் கல்வியைப் தங்களது பாரம்பரிய சொத்தாகப் பேணி வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.

கடந்த காலங்களில் தேசிய மட்டங்களில் ஏற்படுத்தப்படுகின்ற வசதிகள் வாய்ப்புக்கள் இவர்களுக்கு சேர முடியாத கால கட்டத்தினால் கல்வி அபிவிருத்தி மற்றும் பெறு பேற்று அடைவுகள் ஓர் சரிவைச் சந்தித்திருந்தன.

இந்நிலை மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும் இதற்கான முயற்சிகள் மற்றும் மாகாண மட்டங்களில் ஓர் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வளங்கள் வாய்ப்புக்கள் இம் மாணவர்களுக்கும் பங்கிடப்பட்டு அவர்களுக்கான அக புற கற்றல் சூழல் ஏற்படுத்த வேண்டும். இந்த வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமையளித்து ஊக்குவிப்பது பாராட்டுக்குரியதுடன் அது தொடர்பில் நன்றி செலுத்துதலுக்கும் கட்டுப்பாடுடையது.

எனவே இந்த அடையாள நிகழ்வு இங்கு ஓர் இணக்கப்பாடான சூழலுக்கு வழிசமைப்பதோடு எதிர்கால வாழ்விற்குமான நம்பிக்கையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த கல்வி அமைச்சுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

நன்றி வணக்கம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates