jkr

2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது

2010ம் ஆண்டிற்கான பாடசாலைகளுக்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்றையதினம் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல் கொத்தலாவல தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பிரதிக்கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் ஆகியோருடன் கல்வி வெளியீட்டு ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோ வடமாகாண கல்விப் பணிப்பாளர் இராசையா யாழ். மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் ஆகியோருடன் கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மாகாண அமைச்சு திணைக்களம் வலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

பிரதம அதிதிகளின் மங்கல விளக்கேற்றல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்சியாக அமைந்தது. இன்றைய நிகழ்வின் சிறப்புரைகளை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பிரதிக்கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் கல்வி வெளியீட்டு ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவத்தில் சிறப்பம்சமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் செய்மதி ஊடாக நேரடியாகவே தமிழிலும் உரையாற்றினார். ஜனாதிபதியின் உரை நிறைவடைந்ததும் மண்டபம் நிறைந்த கரகோசம் வானைப் பிளந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் வடக்கு தெற்கு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை மற்றுமோர் முக்கிய விடயமாகும். இதில் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் யாழ். மத்திய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் சகல இன மத மாணவர்களும் இணைந்து சிறப்பித்த ஒற்றுமை கீதம் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களின் மீனவ நடனம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் கரகாட்டம் என்பனவும் இடம்பெற்றதுடன் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் விசேட பரதநாட்டியமும் இடம்பெற்றது. கலை நிகழ்ச்சிகளில் கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரி மாணவிகளின் பாரம்பரிய சிங்கள நடனமும் பெரும் கரகோஷத்தை பெற்றது.

2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவத்தில் முக்கிய விடயமாக பாடநூல் விநியோகத்தை குறிக்குமுகமாக தெரிவு செய்யப்பட்ட பலதரப்பு மாணவ மாணவிகளுக்கு அதிதிகள் பாடநூல்களை வழங்கி வைத்தார்கள். அதிலும் வகுப்பேற்றம் பெற்றுச் செல்லும் மாணவ மாணவிகள் கீழ் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாம் உபயோகித்த பாடநூல்களை கையளித்தமை அனைவரையும் நெகிழ்ச்சியுற வைத்தது.

இன்றையநிகழ்வின் நிறைவம்சமாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் நன்றியுரை நிகழ்த்தினார். பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வொன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதும் அதனை ஏராளமான இலத்திரனியல் ஊடகங்கள் நேரடி ஒலி ஒளிபரப்பியதும் ஓர் வரலாற்றுப் பதிவாகும்.

2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதைக் குறிக்கும் முகமாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அவர்களுக்கும் தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்






















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates