jkr

இன்று யாழ். வருகைதந்த அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மகத்தான வரவேற்பு.

2010ம் ஆண்டிற்கான பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிலையில் அதில் பங்குகொள்ளுமுகமாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல் கொத்தலாவல தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பிரதிக்கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் ஆகியோருடன் கல்வி வெளியீட்டு ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க உட்பட பல்வேறு உயரதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

இன்று காலை 8.45 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி அமைச்சர்கள் குழாமை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பாடநூல் பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இடம்பெறும் யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு வெகுசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றின் பாண்ட் அணிவகுப்புடன் விழா நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரமுகர்களை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோ வடமாகாண கல்விப் பணிப்பாளர் இராசையா யாழ். மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் ஆகியோருடன் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.எஸ்.பொன்னம்பலம் ஆகியோரும் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தேசிய கொடியினை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அவர்களும் மாகாண கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கல்லூரிக் கொடியினை அதிபர் திருமதி பொன்னம்பலம் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சமாதானப் புறாக்களும் அதிதிகளால் பறக்கவிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அமைச்சர் குழாம் உட்பட அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இன்று யாழ். வருகைதந்த அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மகத்தான வரவேற்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates