
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 2003ம் ஆண்டில் மட்டும் விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனுக்கு 600மி;ல்லியன் ரூபா வழங்கியுள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விடுதலைப்புலிகள் ஏனைய தலைவர்களுக்கு பாரியளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆண்மையில் கைது செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முக்கியஸ்தரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Response to "தமிழ்செல்வனுக்கு ரிஆர்ஓ எனும் தமிழர் புனர்வாழ்வு கழகம் 600மில்லியன் ரூபா வழங்கியுள்ளது -திவயின தெரிவிப்பு"
แสดงความคิดเห็น