jkr

பொன்சேகாவுடன் சம்பந்தன் திடீர் சந்திப்பு


கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலி்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், அக்கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன், திடீரென சரத் பொன்சேகாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன். இந்த நிலையி்ல தற்போது எதிர்தரப்பு வேட்பாளரான பொன்சேகாவையும் அவர் சந்தித்துள்ளார். இரு தரப்பினரிடமும் பேசுவது என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பொன்சேகாவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன்.

சிறுபான்மையினரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அவர்களின் உடனடிப் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து இரு முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாட்டையும் அறிந்த பின்னர் தங்களது முடிவை எடுக்க தீர்மானித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் கூறுகையில், தற்போதைய நிலையில், தமிழ் மக்களின் ஆதரவின்றி எந்த வேட்பாளரும் வெல்ல முடியாது என்ற நிலைமை உறுதியாகி வருகிறது. இந்தச் சூழலில் எங்களுக்கு (தமிழர்களுக்கு) என்ன நியாயத்தைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு தரப்புகளும் தத்தமது நிலைப்பாட்டைக் கூறுவதற்கு, விஷயங்களை "கக்குவதற்கு" இடமளித்துப் பார்த்திருப்போம். உரியவேளை வரும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வோம். இப்போது அவசரப்பட்டு முடிவு எடுப்பதற்கு எதுவும் இல்லை என்று உதயன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்து ரணில் விக்கிரமசிங்கேவையும் சம்பந்தன் சந்திப்பார் என்று தெரிகிறது.

பொன்சேகா - சம்பந்தன் சந்திப்பின்போது என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும் சம்பந்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
ஈழத்​த​மி​ழர்​க​ளுக்கு யார் அதிக ஆத​ர​வாக நடந்து கொள்கிறார்களோ அவர்​க​ளுக்​குத்​தான் வரும் அதி​பர் தேர்தலில் ஆத​ர​வ​ளிப்​போம்.

தேர்த​லில் ஆத​ரவு என்​பது மிக முக்​கி​ய​மான விவ​கா​ரம். இதனால் இது​கு​றித்து அவ​ச​ர​மாக முடி​வெ​டுத்​திட முடியாது. அதி​பர் தேர்​த​லுக்கு இன்​னும் நாட்​கள் இருக்​கி​றன்​றன. இத​னால் நிதா​ன​மாக முடி​வெ​டுக்​கப்​ப​டும். இது​கு​றித்து தொடர்ந்து ஆலோ​சித்து வரு​கி​றோம்.

ஆத​ர​வ​ளிப்​ப​தற்கு முன்பு நன்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கடந்த காலம் மற்​றும் நிகழ்​கா​லத்தை மட்டுமல்லாமல் எதிர்​கா​லத்​தை​யும் கருத்​தில் வைத்​து​தான் ஆத​ரவு குறித்து முடி​வெ​டுக்க வேண்​டி​யுள்​ளது என்றார்.

இக்கூட்டமைப்பின் எம்.பிக்களில் ஒருவரான பிரேமச்சந்திரன் கூறுகையில்,

ஆளும் கட்​சி​யான ஐக்​கிய மக்​கள் சுதந்​திர கட்சி,​ வரும் அதி​பர் தேர்த​லில் தங்​க​ளுக்கு ஆத​ர​வ​ளிக்​கு​மாறு தமிழ் தேசிய கூட்​ட​மைப்​பி​டம் கோரி​யி​ருந்​தது. ஐக்​கிய மக்​கள் சுதந்​திர கட்​சி​யின் கோரிக்கை பரிசீ​லிக்​கப்​ப​டும் என்​றார்.

இலங்கை அதிபர் தேர்தலி்ல ராஜபக்சே மற்றும் பொன்சேகா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் பெருமளவில் வாக்குகள் பிரியும் என்பதால் தமிழர்களின் ஆதரவைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சேவும், பொன்சேகாவும் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொன்சேகாவுடன் சம்பந்தன் திடீர் சந்திப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates