jkr

தீவகத்தில் மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது வேலணை பிரதேச செயலக பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கியதுடன் கலந்துரையாடியுமுள்ளார்.

இன்று காலை மண்கும்பான் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகர் தேவஸ்தான மணி மண்டபத்தில் வேலணைப் பிரதேச செயலாளர் திரு.நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள சுமார் 891 குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற நிதியுதவி வழங்கியதுடன் அவர்களது தேவைகள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். இதில் இடம்பெயர்ந்தோர் சார்பில் வவுனியா அருணாச்சலம் நிவாரணக்கிராமத்தில் தங்கியிருந்த ஆசிரியரான செ.விக்னேஸ்வரநாதன் என்பவர் மீளக்குடியேறிய மக்களின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து இன்றுபகல் புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்ற மற்றுமோர் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள சுமார் 541 குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற நிதியுதவி வழங்கியதுடன் அவர்களது தேவைகள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் சர்வோதய இயக்குனர் ஜமுனாதேவி புங்குடுதீவு நயினாதீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர் டொக்டர் ராஜரட்ணம் புங்குடுதீவு பிரதேச வைத்திய அதிகாரி டொக்டர் சண்முகரட்ணம் கடற்றொழில் சங்கத் தலைவர் செபமாலை புங்குடுதீவு கடற்படை அதிகாரி லெப்டினன் கொமாண்டர் லியனகே பொதுசன தொடர்பு அதிகாரி கொமாண்டர் அபேரட்ண ஆகியோரும் பங்குகொண்டனர்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான உடனடிக் கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபா நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் வழங்கி உரை நிகழ்த்தும் போது தற்போது அரசாங்கத்தினால் 50 ஆயிரம் ரூபா நிதி இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு போதாது எனவும் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டத்தினை காலக் கிரமத்தில் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை என்பன நிவர்த்தி செய்யப்படும் அதேவேளை மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய கோரிக்கைகள் படிப்படியாகப் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேலணை பிரதேச செயலக பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி கலந்துரையாடியபோது அமைச்சரின் செயலாளர் தயானந்தா ஊடகச்செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச விவகார பொறுப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள்














  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தீவகத்தில் மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates