மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்
இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர் இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கை அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்துவதைத் தடுத்து நிறுத்தினார். அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கடந்த வாரம் பொதுச்சபையில் இலங்கை நிலவரம் குறித்துக் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில் பிரிட்டனின் கலாசார ஊடகப் பிரதிமைச்சர் பென் பிரிட்சோ கடந்த வெள்ளிக்கிழமை உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
பிரிட்டனின் உல்லாசப் பயணத்துறை இணை அமைச்சரான பிரிட்சோ, இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதன் மூலம் ஏன் அந்த நாட்டுக்கு ஆதரவளிக்கின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரிட்டிஷ் அமைச்சருக்கு இலங்கை முழுவதும் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பிரிட்சோ இலங்கை முழுவதும் செல்ல வேண்டும். பின்னர் தன்னைப் போல் சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்துப் பகிரங்கமாக அதிருப்தி வெளியிடவேண்டும் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்சோ இலங்கைக்குச் சென்றால், பிரிட்டிஷ் அரசு அந்நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்துப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
0 Response to "மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்"
แสดงความคิดเห็น