jkr

இருக்கும் சொத்தை பாதுகாத்து அதனை அதிகரிப்பதே எனது கொள்கை. அதற்காக வியர்வை சிந்தி உழைக்க உங்களை அழைக்கின்றேன். வன்னியிலிருந்து மீளக்குடியேறியோரிடம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறைகூவல்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது யாழ்ப்பாண பிரதேச செயலக பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கியதுடன் கலந்துரையாடியுமுள்ளார்.

இன்று காலை யாழ். பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். பிரதேச செயலக மண்டபத்தில் யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணா தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு யாழ். பிரதேச செயலக பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள சுமார் 992 குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற நிதியுதவி வழங்கியதுடன் அவர்களது தேவைகள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான உடனடிக் கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபா நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் வழங்கி உரை நிகழ்த்தும் போது தற்போது அரசாங்கத்தினால் 50 ஆயிரம் ரூபா நிதி இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டத்தினை காலக் கிரமத்தில் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அதனைவிட ஏற்கனவே யு.என்.எச்.சி.ஆர் அமைப்பானது கத்தி கோடரி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியுள்ளதுடன் போரூட் நிறுவனம் உப உணவுகளையும் வழங்கியுள்ளது. மேலும் உலக உணவுத் திட்டமானது ஆறு மாதத்திற்கு தேவையான உலர் உணவு நிவாரணத்தையும் வழங்கவுள்ளது. இதில் ஏதாவது முறைபாடுகள் இருக்குமாயின் எவ்வித தயக்கமும் இல்லாமல் தனக்கோ அல்லது தனது பணிமனைக்கோ அறியத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரையாற்றும்போது தெரிவித்தார். இதேவேளை மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும் அதேவேளை மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய கோரிக்கைகள் படிப்படியாகப் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வளவு காலமும் வன்னியில் ஓர் நிர்ப்பந்தமான வாழ்விற்குள் வாழ்ந்து விட்டீர்கள். அவை யாவும் மே மாதம் பதினெட்டாம் திகதியுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டீர்கள். தற்போது உங்களால் சுதந்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் முடியும். எனவே யாரும் பயப்படவோ தயங்கவோ வேண்டாம். நான் உங்களை ரத்தம் சிந்த அழைக்கவில்லை. வியர்வை சிந்தி உழைக்கவே அழைக்கின்றேன். உள்ளதை இழப்பதற்கல்ல. நாம் இருப்பதை வைத்துக் கொண்டு அதனை பெருக்குவோம். அதற்காக ஒன்றுபடுங்கள். எதிர்வரும் சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

யாழ் பிரதேச செயலக பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி கலந்துரையாடியபோது அமைச்சரின் செயலாளர் தயானந்தா ஊடகச்செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச விவகார பொறுப்பாளர் தோழர் மித்திரன் யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணா தெய்வேந்திரம் யாழ். மாநகரசபை பிரதி மேயர் துரைராஜா இளங்கோ றீகன் யாழ். பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு.தெய்வேந்திரம் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இருக்கும் சொத்தை பாதுகாத்து அதனை அதிகரிப்பதே எனது கொள்கை. அதற்காக வியர்வை சிந்தி உழைக்க உங்களை அழைக்கின்றேன். வன்னியிலிருந்து மீளக்குடியேறியோரிடம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறைகூவல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates