jkr

கடவுளினாலும் எம்மைக்காப்பாற்ற முடியாதிருந்த வேளையிலே எம்மைக்காப்பாற்றி உதவியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே - அச்சுவேலி ப.நோ.கூ.சங்கத் தலைவர் தெரிவிப்பு.

வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் நோக்குடன் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் வலிகாமம் கிழக்கு வடபகுதியில் வாழ்வாதார கடன் வழங்கும் திட்டம் இன்றையதினம் இடம்பெற்றது.

இன்றையதினம் முற்பகல் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைப்பணிமனையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களும் பிரதம அதிதிகளாக பங்குகொண்டனர். சம்பிரதாயபூர்வமான வரவேற்பிற்கு பின்னர் நிகழ்வினை ஆரம்பித்துவைத்து தலைமையுரையாற்றிய அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் கே.பேரின்பநாயகம் அவர்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கடவுளினாலும் எம்மைக்காப்பாற்ற முடியாதிருந்த வேளையிலே எம்மைக்காப்பாற்றி உதவியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் எனத்தெரிவித்தார். இன்று யாழ். குடாநாட்டில் கூட்டுறவு நிர்வாக முறைமையினை மறுசீரமைத்து சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்தி வழிநடத்தி வருபவரும் அவர்தான் எனக்குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் பொ.சிவலிங்கம் அவர்கள் தனது உரையில் மாகாண கூட்டுறவு சம்மேளனம் ஊடாக பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களினால் கிராமிய வங்கிகளின் ஊடாக எவ்வாறு வாழ்வாதார கடன் வழங்கப்படுகின்றது என்பதையும் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எவ்வாறு பக்கபலமாக செயற்பட்டார் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் விசேட உரையாற்றுகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி மக்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்தும் அபிவிருத்தி குறித்தும் பேசுவார். அவரின் தொடர் முயற்சியின் பயன்களில் ஒன்று இன்று நிறைவேறுகின்றது. தற்போது ஒருபுறம் காணிகளில் விவசாயம் செய்யபட்டு வருகின்றபோதும் மறுபுறம் பல காணிகள் செய்கை பண்ணப்படாமல் உள்ளன. இந்நிலை மாறவேண்டும். வெறுமையாக காணிகள் ஒன்றும் இருக்கக்கூடாது. பழையபடி லொறிகளில் யாழ்ப்பாண வாழைக்குலைகள் கொழும்பிற்குப் போகவேண்டும் எனத்தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காணி இல்லாமல் விவசாயம் செய்யமுடியாத நிலைமை. மட்டுமல்ல காணி இருந்தும் விவசாயம் செய்யமுடியாத நிலைமை இன்று காணப்படுகின்றது. இந்நிலைமையினை மாற்றியமைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை நாம் சரிவரப்பயன்படுத்த வேண்டும். வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் ஜனாதிபதியும் அவரது ஆலோசனையின் பிரகாரம் பசில் ராஜபக்ச அவர்களும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எமது ஆளுநர் எமக்கு பக்க பலமாக உள்ளார். இந்நிலையில் எமக்கு கிடைக்கின்ற உதவிகளை நாம் சநியாகப் பயன்படுத்த வேண்டும். இன்னமும் நிறைய உதவிகள் கிடைக்கவுள்ளன. எனவே வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் என்ற எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். அதன்மூலம் எம்மை நாமே முன்னேற்றிக்கொள்ளலாம் எனத்தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து 164 பயனாளிகள் சுயதொழில் நோக்குடன் ஐம்பதாயிரம் ரூபா வரையிலான இலகு கடன் உதவிகளைப் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கான காசோலைகளை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களும் நேரடியாகவே பயனாளிகளிடம் கையளித்தமை விசேட அம்சமாகும்.









  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கடவுளினாலும் எம்மைக்காப்பாற்ற முடியாதிருந்த வேளையிலே எம்மைக்காப்பாற்றி உதவியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே - அச்சுவேலி ப.நோ.கூ.சங்கத் தலைவர் தெரிவிப்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates