jkr

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு முதல்முறையாக சர்வதேச தரச்சான்றிதழ் விருது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா திஸ்ஸ கரலியத்த ஆளுநர் நேரில் சென்று வாழ்த்து.

பொறியியல் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுரோவில் நிறுவனத்திற்கு சர்வதேச தரநிர்ணய அமைப்பினால் வழங்கப்படும் ஐ.எஸ்.ஓ. 900 தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மேற்படி சர்வதேச சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனையொட்டி இன்று ஓர் வைபவம் யாழ் நல்லூர் பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இன்றையதினம் பகல் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யுரோவில் நிறுவன தலைவர் பொறியியலாளர் ராமதாஸ் அவர்கள் தலைமையுரையாற்றுகையில் நான் ஒரு இலங்கையின் தயாரிப்பு எனத்தெரிவித்தார். ஏனெனில் நான் பிறந்தது இலங்கையில். நான் கல்வி கற்றது இலங்கையில். என்னைப் பொறியியலாளர் ஆக்கியதும் இலங்கை. எனவே இந்நிலையில் இந்த சர்வதேச விருதுமூலம் இலங்கையன் என்றவகையில் பெருமை கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.

இன்றையநிகழ்வில் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் பட்டயச்சான்றிதழ் பரிசோதகர் விவேகானந்தன் யுரோவில் முகாமைத்துவ பணிப்பாளர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மண்ணைச்சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சர்வதேச தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது எமக்கெல்லாம் பெருமை எனக்கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் இருபது வருட யுத்தத்தில் இழந்துபோன எமது தேசத்தை விரைவில் கட்டியெழுப்புவதில் யுரோவில் நிறுவனமும் தனது பூரண பங்களிப்பினை செலுத்தும் என தாம் நிச்சயம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வின் சிறப்பம்சமாக யுரோவில் நிறுவனம் பெற்றுக்கொண்ட ஐ.எஸ.ஓ.900 தரச்சான்றிதழை திரு.விவேகானந்தன் அவர்கள் வழங்க திரு சி.வி.கே.சிவஞானம் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் விழா நினைவுக்கேடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்க அதனை திரு விவேகானந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு முதல்முறையாக சர்வதேச தரச்சான்றிதழ் விருது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா திஸ்ஸ கரலியத்த ஆளுநர் நேரில் சென்று வாழ்த்து."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates