jkr

ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற தமிழக அரசுக்கு அனுமதி


பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ஜெயலலிதா, தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க தனிக்கோர்ட் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் திடீரென லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தும், இது தொடர்பாக பெங்களூர் தனிக்கோர்ட் பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டில் அரசு வக்கீல் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசு வக்கீல் ஆச்சார்யா, ஐகோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி ஜாவித்ரகீம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா சார்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாவத் ரஹீம் விசாரணை கோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்து, லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற மனுதார்ரகளுக்கு (தமிழக அரசு) அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த ஹோட்டல் வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வழக்கை வாபஸ் பெறுவதாக ஏற்கனவே தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் அதை மட்டும் விசாரித்தால் தண்டனை பெற்றுத் தர முடியும் என தமிழக அரசு கருதுகிறது.

அதில் லண்டன் ஹோட்டல் வழக்கும் சேர்ந்தால் விசாரணை இழுக்கும், மேலும் போதுமான ஆதாரமும் இல்லை என்பதால் அந்த வழக்கை கைவிட தமிழக அரசு முடிவு செய்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற தமிழக அரசுக்கு அனுமதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates