இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகள் நால்வர் கைது
இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகளில் நான் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் நான்கு பேரும் வைத்திய சிகிச்சைப் பெறுவதற்கு சென்றிருந்த வேளையிலேயே கைது செய்யப்படருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுடன், அவர்களுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரும் கைதுச் செய்யப்பட்டடிருந்த பொழுதிலும் விசாரணைகளின் பின்னர் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைதான நான்கு பேரில் இரண்டு பேருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்த்துக்கான அட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கைதான நான்கு பேரையும் நிரந்தரமாக இந்தோனேசிய சிறையில் தடுத்து வைக்கவிருப்பதாக கடறபடையினர் அச்சுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில், அகதிகள் பாதுகாப்பு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகள் உடனடியாக குடியமர்த்தப்பட வேண்டும் எனவே எதிர்பார்க்கின்றனரே தவிர, அவர்கள் கைது செய்யப்படும் அளவுக்கு தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Response to "இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகள் நால்வர் கைது"
แสดงความคิดเห็น