jkr

கொடுமை செய்த குஷ்பூ

நடிகை குஷ்பூ எங்கு சென்றாலும் அவரைச்சுற்றி சர்ச்சைகளும் கூடவே வந்துவிடும் என்பதற்கு பலவிதமான சம்பவங்கள் முன்னர் நடந்திருக்கின்றன. அதற்கு காரணம் அதிகப்பிரசங்கித் தனமா? அல்லது மொழித்திறன் குறைபாடா என்பது தெரியவில்லை. என்ன தான் பிற மொழியைக் கற்றுக்கொண்டாலும் மிகத்துல்லியமாகப் பேசினாலும் தன் தாய்மொழியைப் பேசுவது போல பேசிவிடமுடியாது. குஷ்புவைப் பொருத்தவரை மும்பையிலிருந்து இறக்குமதியாக 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும் தமிழகத்தின் மருமகள் ஆகிவிட்டாலும் இன்னமும் தமிழில் தேறவில்லை என்பது தான் உண்மை.

கற்பின் நாயகி குஷ்பு:

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா டுடே பத்திரிகைக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து நேர்காணல் அளித்திருந்தார் குஷ்பு. அந்த நேர்காணலில் நடிகைகளிடம் எதிர்பார்த்திர முடியாத கற்பு குறித்து குஷ்பு பேசியவிதம் தமிழக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தது. திருமணமாகாத ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக மற்ற ஆண்களுடன் பாதுகாப்பு சாதனங்களின் உதவியுடன் உறவுவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற தமிழ்குடும்ப பெண்களும் தன்னைப்போல தன் சொந்த ஊரான மும்பையைப் போல இருப்பார்கள் என சொல்லிவிட்டார். அவ்வளவு தான் ஒட்டுமொத்த தமிழகமும் பொங்கி எழுந்தது. குஷ்புவுக்கு எதிராக செருப்படி, விளக்குமாறு அடி, சாணி அபிசேகம், கழுதை ஊர்வலம் என அமர்க்களப்பட்டது தமிழகம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் இருக்கின்றவோ அங்கெல்லாம் குஷ்பு மீது வழக்குகள் தொடரப்பட்டன. வெளியே வர முடியாத அளவிற்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அல்லோகலப்பட்டன. குஷ்புவுக்கு கோயில் கட்டிய மடையர்கள் இருந்த அல்லது இருக்கும் திருச்சி தான் போராட்டத்தில் முன்னிலை வகித்தது என்றால் மிகையாகாது.

பூஜையில் செருப்போடு :

இந்த சர்ச்சைகள் கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியது. நடிகர் பார்த்திபன் படத்தின் பூஜையின் போது அங்கே வைக்கப்பட்டிருந்த சாமிசிலைகளின் அருகில் செருப்புக்காலோடு ஒய்யாரமாக அமர்ந்த குஷ்பு கால்மேல் கால்போட அந்தக் காட்சியை நிறுபர்கள் படம்பிடித்து அது பத்திரிகைகளில் வெளிவர கொஞ்ச நாள் அடங்கியிருந்த குஷ்பு பிரச்சனை மீண்டும் துவங்கியது. முன்போல இப்போதும் ஊர் ஊருக்கு வழக்குப் போடத்தொடங்கினர் குடிமக்கள்.

கற்பு விசயத்தில் மாற்றமில்லை

இந்த செருப்பு விசயம் பெரிதாக உடனே அதற்காக மன்னிப்பு கேட்டார் குஷ்பு. ஆனால் முன்னர் நடந்த கற்புவிசயத்தில் தான் தெரிவித்த கருத்தில் எந்த மாறுதலும் இல்லை எனவும் மீண்டும் தெரிவித்தார் குஷ்பு. தமிழக ரசிக கண்மனிகளின் கனவுக்கன்னியாக நீண்ட நாள் இருந்த‌ குஷ்புவின் மார்க்கெட் பங்கு சந்தை போல சரிய ஆரம்பித்ததும் தொடர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காம்பியர் செய்ய ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாடவும் ஜெயா டிவி ஜாக்பாட்டும் குறிப்பிடத்தக்கவை. ஜெயாடிவி ஜாக்பாட் நிகழ்ச்சி அன்று முதல் இன்று வரை டிஆர்பியில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.ஜாக்பாட்டை பார்க்கும் ரசிகர்களை விட குஷ்பு வாரா வாரம் அணிந்து வரும் விதவிதமான ஜாக்கெட்டை பார்க்க காத்திருக்கும் பெண்களின் கூட்டம் இன்றுவரை அதிகமே!

விருது வழங்கும் விழா:

கடந்த 8ம் தேதி நடந்த 2007**2008 ஆண்டிற்கான திரைப்பட விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளினியாக குஷ்புவை நியமித்திருந்தார்கள். மற்ற டிவி நிகழ்ச்சிகளைப் பொருத்தவரை ஆங்கிலம் கலந்து ஒப்பேற்றி விடலாம். இது தலைவர் கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாதலால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நிகழ்ச்சியின் மொத்த தொகுப்பு வடிவமும் குஷ்புவிடம் தமிழ்ப்படுத்தி அளிக்கப்பட்டிருந்தது.

குஷ்புவின் தமிழ்க்கொலை:

நாம் முன்பே சொன்னது போல தாய்மொழிக்கும் வேற்றுமொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது. என்ன தான் வேற்று மொழியைக் கற்றாலும் அதிலே உச்சரிப்புகள் இலக்கணப்பிழைகள் இல்லாமல் பேசவே இயலாது. அதைப் புரிந்து கொள்வதும் சிரமம். குஷ்புவைப் பொருத்தவரை தமிழ் என்பது வேற்றுமொழி,தமிழில் அவர் இன்னமும் முழுமையடையவில்லை என்பது அறிந்தவர்கள் அறிவார்கள். அப்படி இருந்தும் தமிழை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரு விழாவில் குஷ்புவை மேடையேற்றியது யார் எனத் தெரியவில்லை.

கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலை,ஃபினிசிங் இல்லை, எக்ஸலண்ட்,மார்வலஸ் என எந்த எலவையாவது தமிழில் கலந்து தங்கிலிஸ் ஆக்கி காலம் ஓட்டிவரும் குஷ்பு இந்த விழாவின் காம்பியர் பொருப்பை ஏன் ஏற்றார் எனத்தெரியவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பில் அத்தனை குளறுபடிகள். அவ்வளவு தமிழ்க்கொலைகள்.

பெரியாரின் கொள்ளைகள்:

விழாவைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த குஷ்பு தமிழைக் குத்திக் குதறிவிட்டார். உளியின் ஓசைக்கு ஒளியின் ஓசை என்றும் வள்ளுவர் என்பதை வலுவர் என்றும் குத்தகைக்காரர் என்பதை குத்துகைக்காரர் எனவும் ஓவராக கடித்துத் துப்பிவிட்டார். இப்படியாக அவர் தமிழைக்கொல்லும் இடங்களிலெல்லாம் பார்வையாளர்கள் ஓ வென கூச்சல் போட அசராத குஷ்பு அவர்களை நோக்கி இது தமிழ்மா, அப்டித்தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க எனவும் கூறினார்.ஒரு கட்டத்தில் பெரியாரின் கொள்கைகளை என சொல்வதற்கு பதிலாக பெரியாரின் கொள்ளைகளை எனச்சொல்ல ஒட்டுமொத்த பார்வையாளர்களும் ஓ வென கத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். விசயம் வில்லங்கமாவதை உணர்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அண்ணன் பரிதி இளம் வழுதி அவர்கள் நேராக மேடை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் உளியின் ஓசை படத்திற்கு சிறந்த வசனகர்த்தா விருதை தலைவர் கலைஞருக்கு கொடுப்பதற்காக அவருக்கான முன்னுரை நிகழ்த்தும் நேரம். அதிலே ஏதாவது தவறு நேர்ந்தால் அது கொந்தளிப்பை கிளப்பிவிடும் என பயந்த அமைச்சர் நேராக குஷ்புவிடம் சென்று அவரை ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு அவரே கலைஞருக்கான முன்னுரையை ஆரம்பித்தார். இது முடிந்ததும் மீண்டும் குஷ்புவைத் தேட அவர் ஏற்கனவே கோபத்தில் மேடையைவிட்டு வெளியேறிய விசயம் தெரியவந்தது. ஆனாலும் அசராத அமைச்சர் மேற்கொண்டு அவரே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

நல்லவேளை குஷ்புவின் மீது மீண்டும் வழக்குகள் குவியாமல் காப்பாற்றிவிட்டார் அண்ணன். அய்யா ஏற்பாட்டாளர்களே! இது போன்ற முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் நன்கு தமிழறிந்தவர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துங்களய்யா! பெண் தொகுத்து வழங்கினால் தான் நிகழ்ச்சி நடக்குமா? ஆண்கள் வழங்கினால் நடக்காதா? அது மட்டுமின்றி முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் நமீதா மற்றும் மும்தாஜ் போன்ற முற்றும் திறந்த கழுதைகளின் குத்துப்பாட்டுகள் அனைவரையும் முகம் சுழிக்கவைக்கிறதய்யா. தயவு செய்து இவைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கொடுமை செய்த குஷ்பூ"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates