jkr

சாட்டி கடற்கரை உல்லாச சுற்றுலாத்தலமாக துரித முன்னேற்றமடைகின்றது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் உல்லாசப்பயண சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்யப்படும் வேலணை சாட்டி கடற்கரைக்கு இன்றையதினம் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.

தற்போது கடற்கரைப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு அதன் சுற்றாடலும் தூய்மைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையிலேயே இன்றையதினம் இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பல தடவைகள் சாட்டி கடற்கரைப்பகுதிக்கு நேரயாகச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துப்புரவாக்கும் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் ஆளுநர் சந்திரசிறி அவர்களையும் வடமாகாண உள்ளுராட்சி செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ரொமேஷ் யாழ். உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் ஆகியோருடன் வேலணை பிரதேச சபையின் அதிகாரிகளும் ஊழியர்களும் அன்புடன் வரவேற்றனர்.

இதனையடுத்து சாட்டி கடற்கரை மேம்பாட்டின் அடுத்தகட்டமாக அங்கு சுற்றுலாப்பயணிகளின் வசதி கருதி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படுதல் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பனவற்றை ஆரம்பித்தல் நிழற்குடைகள் பலவற்றை அமைத்தல் போன்ற பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு ஆளுநர் சந்திரசிறி அவர்கள் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் இன்றுமாலை சாட்டி கடற்கரைக்கு விஜயம் செய்தவேளை அங்கு ஒருதொகுதி தென்பகுதி உல்லாசப்பிரயாணிகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் காணப்பட்டமை மற்றுமோர் விடயமாகும். சாட்டி கடற்கரையானது வடபகுதியில் உள்ள இயற்கையான ஓர் எழில்மிகு கடற்கரை என்பதுடன் சுற்றுலா தலம் தொடர்பான அதன் மேம்பாடானது வெளிநாட்டு மற்றும் நாட்டின் தென்பகுதி சுற்றுலாப்பயணிகளை மட்டுமன்றி கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ள உள்ளுர் மக்களுக்கும் புத்தூக்கமளிக்கும் ஓர் சுற்றுலா மையமாக விளங்கும் என்பது நிச்சயம்.





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சாட்டி கடற்கரை உல்லாச சுற்றுலாத்தலமாக துரித முன்னேற்றமடைகின்றது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates