செய்தியறிக்கை
முகாமை விட்டு வெளியே செல்லும் மக்கள் |
வவுனியா முகாம்வாசிகளுக்கு நடமாட்ட சுதந்திரம்
இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.
பல்வேறு தேவைகளுக்குமாக முதன்முறையாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு தேவைகளுக்குமாக முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் முதல் பதினைந்து நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டு வருவதற்கான அனுமதி தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் தம்மிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மெனிக் பார்ம் முகாம்கள் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் வரைபடம் |
அதற்கமையவே ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படப்போவதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவிப்பு
அதிபர் ஜேக்கப் ஸூமா |
ஸூமாவின் இந்த அறிவிப்பு, எய்ட்ஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருகிறது.
ஏற்கனவே ஒருமுறை எய்ட்ஸ் நோய்க்காக பரிசோதிக்கப்பட்டிக்கும் அதிபர் ஸுமா, உலக எய்ட்ஸ் தினத்தின்போது ஆற்றிய உரையில், மற்றவர்களும் இதையே செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.
எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட அனைத்து ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் சிகிச்சை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
தென் ஆப்ரிக்காவில் தான் எய்ட்ஸ் கிருமி தொற்றிய மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருக்கிறார்கள். அங்கு எய்ட்ஸ் தொடர்பான வியாதிகளால் தினமும் ஆயிரம்பேர் இறக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கீகரிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
கிழக்கு ஜெருசலேம் |
மத்தியகிழக்குப் பிரச்சினையின் சமாதான நடவடிக்கைகள் தேங்கிக்கிடப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவிப்பதாக, அந்த ஆவணம் தெரிவிப்பதாகவும், ஹாரெட்ஸ் என்கிற அந்த செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய ஒரு யோசனையானது, பரிசீலனைக்கான ஒரு பரிந்துரை என்கிற அளவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் விவாதத்திற்காக சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக தான் அறியவருவதாக, பிரஸ்ஸல்ஸில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதேசமயம் இது அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறுவதற்கு இன்னமும் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் பலி
ஸ்வாத் பகுதியில் ஆயுததாரிகள் |
ஷம்ஷர் அலிகான் என்ற இந்த மாகாண சட்டப்பேரவை உறுப்பினர், ஹஜ் பண்டிகையை ஒட்டி தனது வீட்டில் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டிருக்கையில், வந்திருந்த விருந்தினர்களில் ஒரு பதின்பருவ தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்தார்.
கான் அவர்களின் சகோதரர் உட்பட ஆறு பேர் இதில் மோசமாக காயமடைந்துள்ளனர்.
தாலிபான் தீவிரவாதிகள் செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான பல தாக்குதல்களில் தற்போது நடந்திருக்கும் இந்த தாக்குதல், ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டது என்று அரசு அறிவித்த பின்னர் நடந்திருக்கிறது.
பேட்டரி போடும் இடத்தில் ஐ.எம்.ஈ.ஐ. எண் குறிக்கப்பட்டிருக்கும் |
இந்தியாவில் அடையாள எண் இல்லாத செல் தொலைபேசிகள் செயலிழக்கம்
இந்தியாவில், அடையாள எண் இல்லாத 25 மில்லியன் செல் தொலைபேசிகளின் செயற்பாடு திங்கள் நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.
ஐ.எம்.இ.ஐ. எனப்படும் 15 இலக்கங்கள் கொண்ட சர்வதேச மொபைல் தொலைபேசிக் கருவி அடையாள எண் இல்லாத செல் தொலைபேசிகளே செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஐ.எம்.இ.ஐ. அடையாள எண்களைக் கொண்டுதான் தொலைபேசி உபயோகிப்பாளர்கள் எந்தத் தொலைபேசியிலிருந்து பேசினார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை சேவை வழங்கும் நிறுவனங்களால் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், அடையாள எண்கள் இல்லாமல் அல்லது போலி அடையாள எண்களுடன் லட்சக்கணக்கான செல் தொலைபேசிகள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்படுகின்றன.
அதிக விலை கொடுத்து, தரமான செல் தொலைபேசிகளை வாங்க முடியாதவர்கள் இத்தகைய தொலைபேசிக் கருவிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அடையாள எண்கள் இல்லாத அத்தகைய செல் தொலைபேசிகள் பயங்கரவாதக் குழுக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைப்புக்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை அதிக முக்கியத்துவம் பெற்றது.
அடையாள எண்கள் இல்லாத தொலைபேசிகள் முடக்கப்படும் என்ற செய்தி, கோடிக்கணக்கான செல் தொலைபேசி உபயோகிப்பாளர்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அதே நேரத்தில் ஏராளமானவர்கள் அடையாள எண்களைப் பெறுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு தொலைபேசி சேவை நிறுவனங்களை நாடியதையும் காண முடிந்தது.
இலங்கை கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன
இது தொடர்பாக நடைபெற்ற வைபவங்களில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்த வைத்திய சாலைகளின் கட்டுப்பாட்டை உத்தியோகபூர்வமாக மத்திய அரசின் உள்நாட்டு வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கையளித்தார்.
மாகாணத்தில் இரண்டு ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது என மத்திய அரசு எடுத்துள்ள தீர்மானத்தின் பேரிலேயே மருத்துவமனை நிர்வாகத்தை தாம் கையளித்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.
மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக இதனை கருத முடியாது என்றும், தேவை ஏற்பட்டால் அபிவிருத்திக்குப் பின்னர் இந்த மருத்துவமனைகளை மாகாண சபையினால் மீளப்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவர்க்கும் அறிவியல்
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น