அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்களால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் 15 பாடசாலைகளுக்கான உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.
வடமாகாண கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார்.
கடந்தகால சீரற்ற நிலைமையில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான வளங்கள் இல்லாத பாடசாலைகளின் நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு சமூக சேவைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மூலம் மேற்படி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 9 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிணங்க ஒவ்வொரு பாடசாலைக்குமென 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் கனணிகள் இரும்பு அலுமாரிகள் மற்றும் வெண்பலகை என்பனவும் மெற்படி நிகழ்வில் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்தகால போரின் பாதிப்புக்களுக்குப் பின்னர் அழிந்துபோன தேசத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கு வன்முறை அரசியலின் பாதகமான விளைவுகளை மீண்டும் ஒரு தடவை சீர்தூக்கி பார்ப்பதன் அவசியத்தை இந் நிகழ்வில் வலியுறுத்தியதுடன் தவறான அரசியல் தலைமைகளால் தேசம் எதிர்கொண்ட பாதிப்பை புரிந்துகொண்டு உரிய மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தக் கூடிய நேர்மையான உண்மையான புதிய அரசியல் தலைமையொன்றின் கீழ் அணி திரள்வதன் மூலம் எமது தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியுமென தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் கடத்தல் காணாமற்போதல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியாவில் நடைபெற்று வருகினற் ஒரிரு சம்பவங்களின் உண்மைத்தன்மையை மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு இத்தகைய சக்திகள் மீண்டும் தலையெடுக்காதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமென்றும் கேட்டுக்கொண்டார்.

0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்களால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு"
แสดงความคิดเห็น